Pages

Wednesday, November 16, 2011

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை : பந்தயம் கட்டியவர்களுக்கு ஆப்பு!

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஐஸ்வர்யா ராய், மும்பை புறநகர் பகுதியில் உள்ள செவன்த் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து லேபர் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காலை 10 மணியளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பெண் குழந்தை பிறந்ததை ஐஸ்வர்யாவின் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் டுவிட்டர் இணைய தளத்தில் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார். அமிதாபும், தான் அழகான குழந்தைக்கு தாத்தா ஆகி விட்டதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் திருமணம் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. கடந்த ஜூன் மாதம், ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அமிதாப் வெளியிட்டார். உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை வைத்து கோடிக்கணக்கில் சூதாட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment