Pages

Saturday, November 19, 2011

தனுஸின் கொலவெறி பாருங்கள்(காணொளி இணைப்பு)

ஏன் இந்த கொலவெறி என கொலவெறியாக ஆக வேண்டாம். தனுஸ் நடிக்கும் ’3′ படத்திற்காக தனுஸே எழுதி பாடியிருக்கும் பாடலின் ஆரம்ப வரிகள்தான் இது.

தனுஸின் மனைவி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் தனுஸ், ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் படம் ’3′. இப்படம் பொங்கல் வெளியீடாக வெளியிடப்படவுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட எண்ணியுள்ள திருமதி தனுஸ், சிம்பு வழியில் படத்தின் ஒரு பாடலை மட்டும் முதலில் வெளியிட்டுள்ளார். இப்பாடல் தற்போது இளசுகளிடையே ஒரு கொலவெறியை ஏற்படுத்தி வருகிறது.

தனுஸின் கொலவெறியை நீங்களே பாருங்கள்…

Wednesday, November 16, 2011

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை : பந்தயம் கட்டியவர்களுக்கு ஆப்பு!

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஐஸ்வர்யா ராய், மும்பை புறநகர் பகுதியில் உள்ள செவன்த் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து லேபர் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காலை 10 மணியளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பெண் குழந்தை பிறந்ததை ஐஸ்வர்யாவின் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் டுவிட்டர் இணைய தளத்தில் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார். அமிதாபும், தான் அழகான குழந்தைக்கு தாத்தா ஆகி விட்டதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் திருமணம் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. கடந்த ஜூன் மாதம், ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அமிதாப் வெளியிட்டார். உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை வைத்து கோடிக்கணக்கில் சூதாட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


இயக்குனருடன் ஒத்துழைப்பது கஷ்டம்! - பூர்ணா


இயக்குனருடன் ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பது ரொம்ப கஷ்டமான வேலை என்று நடிகை பூர்ணா கூறியுள்ளார். முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு, படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. சின்ன அசின் என்று நடிகர் விஜய்யால் புகழப்பட்ட பூர்ணாவுக்கு எந்த வெற்றிப்படமும் அமையவில்லை. தற்போது பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும்,வித்தகன் படத்தில் பார்த்திபன் ஜோடியாக நடித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நிறைய ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் முதன் முதலாக இயக்குனருடன் நடித்திருப்பது 'வித்தகன்' படத்தில்தான். பொதுவாக கமர்சியல் படங்களில் ஹீரோயின்களுக்கு பெரிய வேலை இருக்காது என்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் எனக்கு பெரிய பங்கு இருக்கிறது. கிறிஸ்தவ பெண் கேரக்டர். பார்த்திபன் செய்யும் எல்லாவற்றுக்கும் நான் மட்டுமே சாட்சி. ஆக்ஷன் காட்சிகளில் கூட நடித்திருக்கிறேன். வியட்நாம், செக் குடியரசு நாடுகளுக்கு சென்று பாடல் காட்சியில் வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் ஆடியது புதிய அனுபவமாக இருந்தது. பார்த்திபன் இல்லாத காட்சிகளில் எளிதாக நடித்து விட்டேன். அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் நடிப்பது கோச்சுடன் சேர்ந்து விளையாடுவது மாதிரி இருந்தது. சிறிய தவறையும் உடனே கண்டுபிடித்து விடுவார். அதனால் பயந்து கொண்டே நடித்தேன். இயக்குனர்களே ஹீரோவாக நடிக்கும்போது அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பது கடினமானது என்பது புரிந்தது. மற்ற படங்களை விட இதில் நான் கூடுதல் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள், என்று கூறியிருக்கிறார்.

பெண்ணின் ‘அந்த’ இரண்டு யானை! கவிஞரின் உறையவைத்த விளக்கம்

சந்தோஷ் சிவன் உருமி என்ற மலையாள படத்தை இயக்கி இருக்கிறார். இது தமிழ், தெலுங்கு,இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ப்ரித்விராஜ், ஜெனிலியா, பிரபுதேவா,வித்யாபாலன், தபு, ஆர்யா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபக்தேவ் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார்.
இந்த படத்தின் இசை விழாவில் பேசிய வைரமுத்து, இந்த படத்தில் பாடல் எழுதியதற்காக நான் பெருமை படுகிறேன். தீபக் தேவ் அருமையாக இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் சங்க இலக்கிய மொழியை கையாண்டுள்ளேன். இந்த படத்தின் 15ஆம் நூற்றாண்டு என்ற களம் தான் நான் பாடல் எழுத என்னை ஊக்குவித்தது.
இதில் ஒரு பாட்டு உண்டு...
உரை விட்டு வந்த வாளோ...
ஒளிவிட்டு வந்த வேலோ...
திருமகன் அவர் யாரோ...
திருவுளம் புரிவாரோ... என்ற பாட்டு.
இதில் சங்க இலக்கிய மொழியை கையாண்டிருக்கிறேன்.
கமல்ஹாசன் கூட பேசியிருக்கிறார் சினிமாவில் தமிழ் வளர்ப்பது கடினம் என்று,அவர் எவ்வளவு நொந்து அதை சொல்லியிருப்பார் என்பது எனக்கு தெரிகிறது. ஆனால்
சினிமாவில் இன்னும் தமிழ் வளர்க்க முடியும் என்பதற்கு உருமி ஒரு எடுத்துக்காட்டு.
அந்த பாடலில் இப்படி ஒரு இடம் வருகிறது...
ஒரு பெண் போர்வீரனை நேருக்கு நேர் நோக்கி,
அதோ அதோ உன் ஒரு கரம் உருக்கி களிரொன்று எரிகின்றாய்...
இதோ இதோ என் இரு களிர் அடக்க என் குடில் வருகின்றாய்... என்று பாடுகிறாள்.
'உன் ஒரு கையால் ஒரு யானையை அடக்கிவிட்டாய், என் இரண்டு யானையை அடக்க இப்போது நீ முயற்சி செய்கின்றாய்" என்பது அந்த வரிகளின் பொருள்.
அந்த 'இரு களிரு' என்ன என்பது அறிந்தோர் அறிவாராக, தெரிந்தோர் தெரிவாராக என்று கவிஞர் சொல்லிக்கொண்டிருக்க... அரங்கத்தில் ஒருவர் மட்டும் கைதட்டினார், உடனே கவிஞர் அந்த ரசிகன் கை தட்டினான் அல்லவா, அவனுக்குத் தான் இந்த வரி. இந்த வரியின் அர்த்தம் புரியாதவர்கள் அவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்ல அரங்கமே கைத்தட்டியது.
இது நான் எழுதிய வரிகள் அல்ல... இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பு புறநானூற்றில் வருகிர வரி. இந்த இரண்டாம் நூற்றாண்டில் வருகிற பாட்டை 15ஆம் நூற்றாண்டு கதைக்கு 21ஆம் நூற்றாண்டில் எழுதியிருக்கிறேன். அதற்காக சந்தோஷ் சிவனுக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.
படத்தைப் பற்றி பேசிய வைரமுத்து, இதில் ப்ரித்விராஜ் ஒரு வீரமுள்ள ஆண்மகனாக, சிங்கம் போல வருகிறார். ஜெனிலியாவை படங்களில் பார்த்திருக்கிறோம், ஆனால் இதில் அந்த பெண் வாள் ஏந்தி சண்டையிடும்போது ஆச்சரியமாக உள்ளது. அந்த பெண்ணிடம் வாள் கொடுக்க வேண்டும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்த பெண்ணே வாளின் உயரம் தான் என்று கவிஞர் கிண்டலடிக்க அரங்கம் அதிர கைத்தட்டு விழுந்தது.
லைலா அவ்வளவு ஒன்றும் அழகில்லையாம். அவள் கருப்பாம். அவளின் மூக்கு சப்பையாக இருக்குமாம். ஆனால் மஜ்னு சொல்கிறான்... அவளை என் கண்களைக் கொண்டு பார்க்க வேண்டும். உங்கள் கண்களால் பார்த்தால் அவள் அழகி இல்லை. என் கண்களால் பார்த்தால் அவள் பேரழகி என்றான். அது போல நாம் சந்தோஷ் சிவனின் கண்களால் பார்க்க பழகிக்கொண்டால் உலகம் அழகாக தெரியும் என்று பேசினார் வைரமுத்து.

பிப்ரவரி 4-ந்தேதி திருமணமா? -ஜெனிலியா பதில்


பிப்ரவரி 4 ந் தேதி ரித்தேஷ் தேஷ்முக்கின் முழு கட்டுப்பாட்டுக்குள் வரப்போகிறார் ஜெனிலியா. ஆமாம்... அன்றுதான் இருவருக்கும் திருமணம் என்றெல்லாம் புரோகிதர் வேலை பார்த்துவிட்டது மீடியா. அதை நானல்லவா முடிவு பண்ணணும்? மீடியாவுக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம் என்று தாண்டி குதித்துக் கொண்டிருக்கிறார் ஜெனிலியா.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என்று நான்கு மொழிகளிலும் டாப் ஹீரோயின்களில் ஒருவராகிவிட்டார் ஜெனி. அவரது காதல் பற்றியும் கல்யாணம் பற்றியும் அவ்வப்போது வதந்திகளை கிளப்பி குளிர் காய்ந்து கொண்டிருந்தது மீடியா. ஒரு சுவாசத்திற்கும் மறு சுவாசத்திற்கும் நடுவிலிருக்கிற இடைவெளி அளவுக்கு கூட விஷயம் வெளியே கசிந்துவிடக் கூடாது என்று ரகசியம் காத்த ஜெனிலியாவுக்கு பெருத்த ஏமாற்றம். இருவரும் எங்கே சந்திக்கிறார்கள் என்பது வரைக்கும் செய்திகளை பஞ்ச் பஞ்ச்சாக வெளியிட்டார்கள் நான்கு மொழி பத்திரிகையாளர்களும்.
இதில் எரிச்சலாகியிருந்த அவருக்கு நேற்றைய தினம் இன்னும் கொடுமை. பிப்ரவரி 4 ந் தேதி இருவருக்கும் திருமணம் என்ற செய்தியை நாடு முழுக்க பரவவிட்டது மீடியா. நேற்றே இதை மறுத்திருக்கிறார் ஜெனிலியா.
நாங்க ஒண்ணும் ரகசியமா கல்யாணம் பண்ணிக்க மாட்டோம். ஊர் உலகத்துக்கு அறிவிச்சுட்டுதான் செஞ்சுப்போம். அதற்குள் ஏன் நீங்களாகவே ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும் என்றெல்லாம் அழுது புலம்பியிருக்கும் அவர், விரைவில் நாங்களே ஒரு தேதியை சொல்வோம். அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க என்று கூறிவிட்டார்.
ஜெனிலியா இப்படி சொல்வதற்கு நிறைய காரணம் இருக்கிறது. இவரை நம்பி பணத்தை கொட்டி படமெடுத்த தயாரிப்பாளர்கள், இந்த திருமண செய்தியால் பெருத்த அப்செட். ஜெனிலியா நடித்த படங்கள் ரிலீஸ் ஆன பின்பு வேண்டுமானால் இந்த கல்யாணம் நடக்கட்டும் என்று கூறியிருப்பதாக தகவல்.

நடிகரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து!


குடிபோதையில் வாகனம் ஓட்டிய நடிகர் நிகிலின் டிரைவிங் லைசென்சை ஓராண்டுக்கு ரத்து செய்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஹேப்பி டேஸ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நிகில். கடந்த வெள்ளிக்கிழமை ஐதராபாத்தில் தனது நண்பர்களுடன் ஒரு பார்ட்டியில் கலந்துகொண்ட அவர்,நள்ளிரவில் வீடு திரும்பினார். பஞ்சரா ஹில்ஸ் அருகே போக்குவரத்து போலீசார் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
நிகில் போதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து நிகில் கூறுகையில், சக நண்பர்களின் வற்புறுத்தலால் மது குடித்தேன். போதையில் வாகனம் ஓட்டியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும் என கூறினார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை, ஐதராபாத் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கவேண்டிய நடிகர்களே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களது ரசிகர்களும் இதையேதான் பின்பற்றுவர்கள். நிகிலுக்கு ரூ.2,600 அபராதம் விதிக்கப்படுகிறது. அவரது லைசென்ஸ் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படுகிறது'' என தீர்ப்பளித்தார்.

விஜயகாந்த் பெயரில் வசூல் வேட்டை!


தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். தேமுதிக தென் சென்னை மாவட்ட செயலாளர் வி.என்.ராஜன், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர்,வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினோம். அதில், அடையார் இந்திரா நகரில் உள்ள எஸ்.ஆர்.ராமசாமி நாயக்கர் இல்லம் என்ற பெயரில் புதுமனை புகுவிழா நடப்பதாகவும் இதில், விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா,எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொள்வதாகவும் அச்சடித்து தமிழகம் முழுவதும் கொடுத்துள்ளனர்.
அழகர் சாமி என்பவர் இதுபோல் செய்து வசூல் வேட்டை நடத்தி வருகிறார். இந்த விழாவில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. மேலும், அழகர்சாமி எங்கள் கட்சியின் உறுப்பினரே இல்லை. எனவே, விஜயகாந்த் பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அழகர்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு ராஜன் கூறினார். கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.